வலங்கைமான் சிறப்பு

வணக்கம் நண்பர்களே,


     நான் இன்று ஒரு ஊரை பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள போகிறேன்.  இது என் சொந்த ஊர். என் ஊரின் பெயர் "வலங்கைமான்".

    வலங்கைமான், உங்களில் பல பேர் இந்த ஊரை பற்றி கேள்விபட்டுருப்பீர் .  இது கோவில் நகரமான கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணம்-ஆலங்குடி சாலையில் உள்ளது.
வாருங்கள் வலங்கைமானில் என்ன புகழ் பெற்றவை என்று பார்ப்போம்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில்:

     வலங்கைமானில் பாடைக்கட்டி மாரியம்மன் என்கிற மகா மாரியம்மன் கோயில் மிகவும் பிரபலம்.  மாரியம்மன் கோயில் என்றாலே திருவிழாக்களும், காவடி களும் பரவலாக காணப்படும். இங்கும் அப்படி தான்,  பங்குனி மாத திருவிழா மிகவும் பிரபலம்.  இங்கும் மாரியம்மனுக்கு காவடிகள் எடுப்பார்கள் - பால் காவடி, வேல் காவடி, என பல காவடிகள்.  ஆனால் இங்கு வேறு ஒரு வித்யாசமான காவடியும் உண்டு அது தான் பாடை காவடி .  பாடை காவடி, இதில் நேர்த்திக்கடன் வேண்டி கொண்டு பிணம் போல பாடையில் படுத்து கோயிலை சுற்றி வருவார்கள்.  பாடையில் படுத்து எழுந்திருக்கும் வரை அவர்கள் மயங்கிய நிலையில் இருப்பார்கள் என்றும் கூறுவார்கள்.  ஆம் இங்கு உயிருடன் இருக்கும் மக்களை பாடையில் ஏற்றி காவடி எடுப்பார்கள். இப்படி செய்வதன் மூலம் பழைய தீமை மறைந்து நல்லதாய்  புதிதாய் பிறக்கிறார்கள் என்று ஒரு நம்பிக்கை.இதுவே பாடை கட்டி மாரியம்மன் கோயில்.

VALANGAIMAN MARIYAAMMAN KOIL

இங்கு வேறு ஒன்றும் மிக பிரபலம்,

வலங்கைமான் செங்கல்.

      வலங்கைமான் செங்கல் அதன் தரத்திற்கு பெயர்போனது.  இங்கு இருக்கும்
மண் செங்கல் செய்ய ஏற்றது.  இந்த மண்ணில் செய்யும் செங்கல் உறுதியானது.  "வாகை சூடவா" என்கிற தமிழ் படம் இங்கு எடுக்கப்பட்டது தான். அதில் வரும் செங்கல் சூளைகள் வலங்கைமான் செங்கல் சூளைகள் தான்.  செங்கல் சூளை இங்கு மிக பிரபலம்.

அது மட்டும் அல்ல. இங்கு ஐந்து சிவன் கோயில்கள் உள்ளன.

இந்த ஐந்து சிவன் கோயிலில் ஒரு சிவன் கோயிலில் சித்தர் ஒருவரின் ஜீவா சமாதி உள்ளது. இது இவூரில் பலருக்கு தெரியாது.

ஆம், அந்த சிவன் கோயிலின் பெயர்

"கைலாசநாதர் திருக்கோயில்"

siddhar jeeva samathi


இத்திருக்கோயிலில் அம்மன் சந்நிதிக்கு அருகில் ஒரு சிறிய கருவறையில் ஒரு லிங்கம் உள்ளது.  இது பலருக்கு என்ன என்று தெரியாது. இது உண்மையில் ஒரு சித்தருடைய ஜீவா சமாதி.  ஒரு சித்தர் தான் ஜீவனுடன் கீழே அமர்ந்துள்ளார்.  அவர் நாமம் அண்ணாமலை சித்தர்.  உங்களுக்கு வலங்கைமான் வரும் வாய்ப்பு கிடைத்தால் இக்கோயிலுக்கு வாருங்கள்.  சித்தரை தரிசித்து செல்லுங்கள். சித்தர் அருள் பெறுங்கள்.

இன்னும் ஏராளம் சொல்ல உள்ளது. அதை அடுத்த பதிவில் பாருங்கள்.

நன்றி
வாழ்க வளமுடன்.

Comments